Saturday 1st of June 2024 06:19:51 AM GMT

LANGUAGE - TAMIL
அரசியலில் குதிக்கிறார் வன்னியின் கல்வியாளர்களில் ஒருவரான பெ.க. சிவலிங்கம்!

அரசியலில் குதிக்கிறார் வன்னியின் கல்வியாளர்களில் ஒருவரான பெ.க. சிவலிங்கம்!


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்வியாளர்களில் ஒருவரான கந்தையா சிவலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான வேட்பாளர் பங்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு புளொட் அமைப்பினருக்கு இரண்டு வேட்பாளர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் போட்டியிடுவார் என்றும் மற்றைய வேட்பாளராக பெ.க. சிவலிங்கம் போட்டியிடுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் அருவி இணையத்தளத்துக்குத் தெரிவித்தன.

முல்லைத்தீவு தண்ணீரூற்றை பிறப்பிடமாகவும் புதுக்குடியிருப்பினை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவலிங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளான புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி, முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றின் முன்னைநாள் அதிபர் என்பதுடன் புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசனின் சகோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE